Reading Time: < 1 minute

கனடாவின் ஒண்டாரியோவின் கிளாரிங்டன் (Clarington) அருகே ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற நேருக்கு நேர் மோதிய வாகன விபத்தில் 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

சாலை 35/115 இன் (Highway 35/115) வடக்கு நோக்கிச் செல்லும் பாதையில், கன்செஷன் வீதி 3 இற்கு (Concession Road 3) தெற்கே இரண்டு SUV ரக வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான ஒரு SUV வாகனத்தின் ஓட்டுநரான கிளாரிங்டன் குடியிருப்பாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய வாகனத்தின் ஓட்டுநர் உயிருக்கு ஆபத்தில்லாத காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

விபத்துக்கான உடனடி காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சமப்வம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.