Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒன்றாரியோவின் ஸ்டார்ட்போர்ட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 36 வயதான ஜொனதன் பெனாட் என்பவர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான புதிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலை 31 வயதான ரிக்கி பில்கே என்பவர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலில் மேலும் இரண்டு பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட நபரும் துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டக் கொண்டு உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.




