Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் தினசரி உயிரிழப்பின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 758பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 31பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்படி, கடந்த ஏப்பரல் மாதத்திற்கு பிறகு தற்போது குறைவான தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி 23பேர் உயிரிழந்திருந்தனர்.
மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91,705ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,326ஆக உள்ளது.
மேலும், 34,653பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 49,726பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 1,648பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




