Reading Time: < 1 minute

ஒரு தொகுதி உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

மூன்று விசேட விமானங்களில் இவ்வாறு உக்ரைன் ஏதிலிகள் கனடாவிற்கு அழைத்து வரப்படுவதாகவும் இதில் முதல் விமானம் கனடாவை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 300 உக்ரைன் ஏதிலிகள் இவ்வாறு கனடாவை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு கனடாவை வந்தடைந்த உக்ரைன் பிரஜைகள் மிகுந்த மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் ஏதிலிகள் வின்னிபிக் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். பிரதிப் பிரதமர் கிறிஸ்டியாக ப்ரீலாண்ட் உக்ரைன் பிரஜைகளை வரவேற்றுள்ளார்.

விமானத்தின் இன்டர் கொம் வழியாக ப்ரீலாண்ட், உக்ரைன் பிரஜைகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.