Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் மதுபான விற்பனை தொடர்பில் அறிவித்தல் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மதுபான விற்பனை நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகளிலும் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கோடை காலத்தில் இவ்வாறு மதுபான விற்பனையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மளிகைக் கடைகள் உள்ளிட்ட சில விற்பனை நிலையங்களில் மதுபான வகைகள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மாகாண முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் திகதி தொடக்கம் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.




