Reading Time: < 1 minute

ஒன்றாரியோவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், இரண்டாம் கட்ட தடுப்பூசி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

புதிய அட்டவணையின்படி, இரண்டாம் கட்ட தடுப்பூசி போடும் பணிகள், ஏப்ரல் மாத ஆரம்பத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

80 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், நோயாளிகளுடன் பணிபுரியும் சுகாதாரப் பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் பழங்குடி சமூகங்களுக்கு தடுப்பூசி போடுவது இதில் அடங்கும்.

மேலும், இதில் ஆசிரியர்கள், முன்கள பணியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் துறையில் உள்ளவர்கள் போன்ற முன்னணி அத்தியாவசிய தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடுவது அடங்கும்.

வயது மூத்தவர்களுக்கு (75 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மற்றும் அதிக ஆபத்துள்ள நாட்பட்ட நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதும் இதில் அடங்கும்.