ஒன்ராறியோ மாகாணத்தில் வாகனக் காப்பீட்டுத் திட்டத்தில் ஜூலை 1, 2026 முதல் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்த மாற்றம், குறிப்பாக காப்பீட்டு பாலிசிகளை புதுப்பிக்கும் வாகன சாரதிகள் மற்றும் குடும்பங்களுக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
தற்போது ஒன்ராறியோவில் வாகனக் காப்பீட்டுத் திட்டங்களில் பல accident benefits கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய மாற்றத்தின் கீழ், மருத்துவச் செலவுகள், மறுவாழ்வு சிகிச்சை மற்றும் உதவியாளர் பராமரிப்பு தொடர்பான பலன்கள் மட்டும் கட்டாயமாக தொடரும்.
இதற்குப் பிறகு, வருமான மாற்றுப் பலன், வேலை செய்யாதவர்களுக்கான பலன், பராமரிப்பாளர் பலன், வீட்டு பராமரிப்பு செலவுகள், கல்வி இழப்பு செலவுகள், பார்வையாளர் செலவுகள், தனிப்பட்ட பொருட்கள் சேதம், மரண மற்றும் ஈமச்சடங்கு செலவுகள் போன்ற பல accident benefits விருப்பத்தேர்வாக மாறவுள்ளன.
இதன் மூலம் சில வாகன சாரதிகள் தங்களது காப்பீட்டு கட்டணத்தில் சிறியளவு சேமிப்பு பெறலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், நிபுணர்கள் இதை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும் என எச்சரிக்கின்றனர்.
காப்பீட்டு கட்டணத்தை குறைப்பதற்காக இந்த optional benefits-ஐ நீக்குவது, விபத்து நேரத்தில் பெரிய நிதி சுமையாக மாறக்கூடும். குறிப்பாக வருமான இழப்பு, நீண்டகால சிகிச்சை, குடும்ப பராமரிப்பு அல்லது மரண செலவுகள் போன்ற சூழ்நிலைகளில், தேவையான காப்பீடு இல்லாதது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்.
மேலும், optional benefits இனி எல்லோருக்கும் தானாகப் பொருந்தாது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். policy-யில் பெயர் உள்ள நபர், அவருடைய துணைவர், சார்ந்திருப்போர் மற்றும் policy-யில் குறிப்பிடப்பட்ட ஓட்டுநர்கள் போன்றவர்களுக்கே இந்த விருப்பத்தேர்வு பலன்கள் பொருந்தும் வாய்ப்பு உள்ளது.
இதனால், வாகன உரிமையாளர்கள் தங்களது insurance broker அல்லது insurance company-யுடன் பேசிக் கொண்டு, எந்த பலன்கள் தங்களுக்கு தேவையானவை என்பதை முன்கூட்டியே சரிபார்ப்பது அவசியமாகிறது.
குறிப்பாக குடும்பத்தினர், குழந்தைகள், வேலைக்குச் செல்லும் நபர்கள், self-employed நபர்கள், மற்றும் தினசரி வாகனம் பயன்படுத்துவோர் இந்த மாற்றத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், தங்களது காப்பீட்டு பாதுகாப்பை முழுமையாக மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
ஜூலை 1 முதல் காப்பீட்டு பாலிசி புதுப்பிக்கும் ஒன்ராறியோ வாகன சாரதிகள், குறைந்த premium-ஐ மட்டும் பார்க்காமல், விபத்து நேரத்தில் கிடைக்கும் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.