Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்ராறியோ மக்கள் அனைவரும் QR குறியீடு உடன் தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி சான்றிதழ் பதிவிறக்கம் செய்யும் வசதி வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டாலும், அதற்கு முன்னரே செயலிகள் வாயிலாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
மேலும், ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் பிறந்தவர்கள் தற்போது மாகாணத்தின் கொரோனா இணைய பக்கம் வாயிலாக தங்கள் தடுப்பூசி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய முடியும், எஞ்சியவர்களுக்கு வார இறுதியில் அனுமதி அளிக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்ராறியோ மக்களுக்கும், மருத்துவர்களால் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கும் சான்றிதழ் பெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




