Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா நகரில், திங்கள்கிழமை இரவு ரிடோ நதியில் (Rideau River) நீந்த சென்ற ஒரு பதின்ம வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

சம்பவம் ஒட்டாவாவின் தெற்கு பகுதியில் உள்ள வால்டோன் அப்டோன் கொலின்ஸ் Walton Upton-Collins பூங்கா அருகே, இரவு 9.20 மணியளவில் நிகழ்ந்தது.

அந்த நேரத்தில் மூன்று பேர் ரிடோ நதியில் நீந்திக்கொண்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கிய மாணவனை மீட்டு உயிர் காப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஒட்டாவா தீயணைப்புப் படையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். மாணவன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கனடாவில் வெள்ளநீர் மற்றும் ஆறுகளில் நீந்தும்போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம் என்று மீட்புப் படையினர் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.