Reading Time: < 1 minute

உலக நாடுகளின் மகிழ்ச்சி குறித்த வருடாந்திர அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் கடந்த காலங்களில் முன்னணியில் இருந்த கனடா, இந்த ஆண்டு பெரும் சரிவைச் சந்தித்து 25-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ‘நல்வாழ்வு ஆராய்ச்சி மையம்’ (Wellbeing Research Centre) வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின்படி குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பின்லாந்து, தொடர்ந்து 9-வது ஆண்டாக உலகின் மகிழ்ச்சியான நாடாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளது.

நார்டிக் நாடுகளான ஐஸ்லாந்து, டென்மார்க் மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகள் வழக்கம் போல முதல் 10 இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.

கனடா, கடந்த ஆண்டு 18-வது இடத்தில் இருந்த கனடா, தற்போது 25-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இது 23-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை விடப் பின்தங்கிய நிலையாகும்.

2015-ம் ஆண்டு அறிக்கையில் உலகின் 5-வது மகிழ்ச்சியான நாடாக இருந்த கனடா, அதன்பிறகு படிப்படியாகச் சரிந்து வருகிறது. 2012-ல் இந்த ஆய்வு தொடங்கப்பட்டதிலிருந்து கனடா பெற்றுள்ள மிகக்குறைந்த தரவரிசை இதுவே ஆகும்.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் 25 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே மகிழ்ச்சி மற்றும் வாழ்க்கை மீதான திருப்தி கடந்த பத்தாண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இளைஞர்கள் சமூக ஊடகங்களில் (Social Media) நீண்ட நேரம் செலவிடுவது அவர்களின் மனநலத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கும் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

போர் மற்றும் மோதல்கள் நிலவும் நாடுகள் பட்டியலின் கடைசி இடங்களில் உள்ளன. ஆப்கானிஸ்தான் உலகின் மகிழ்ச்சியற்ற நாடாக மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.