Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண பிறகு ஒருவர் அண்மையில் உலகை சுற்றும் நோக்கில் புறப்பட தயாராகி வருகின்றார்.

Tamil Business Directory

லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றில் பாரிய தொகை பண பரிசிலை அவர் வென்றிருந்தார்.

தாமஸ் மெர்சல் என்ற நபரே இவ்வாறு ஐந்து இலட்சம் டாலர் பண பரிசினை வென்றிருந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் குயின்செல் என்னும் பகுதியை சேர்ந்த குறித்த நபர் பணப்பரிசு வெற்றி குறித்து தனது துணைவியிடம் தெரிவித்ததாகவும் அவர் பெரு மகிழ்ச்சி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

இந்த பரிசுத் தொகையை எவ்வாறு செலவிடுவது என்று தற்பொழுது அவர் குழம்பி போய் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது கடவுச்சீட்டு நீண்ட காலமாக பயன்படுத்தாத நிலையில் காணப்படுவதாக அதனை புதுப்பித்துக் கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

தேவையானவர்களுக்கு உதவுவதற்கும் தாம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

டெய்லி கிரான்ட் லொத்தர் சீட்டிப்பலுப்பில் தோமஸ் இவ்வாறு ஐந்து லட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார்.