Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

காயமடைந்தவர்களில் தாக்குதலை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரொறன்ரோவின் ஈஸ்ட் யோர்க் பகுதியின் டான்போர்த் மற்றும் தியாரா வீதிகளுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மூன்று ஆண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் இறுதியில் கைகலப்பாக மாறி கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலில் காயமடைந்த மூவருக்கும் உயிராபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கத்தி குத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வைத்தியசாலை சிகிச்சையின் பின்னர் பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கத்தி குத்து தாக்குதல் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.