ஈரானில் நடைபெற்று வரும் போருக்கு இராணுவ தீர்வை விட ராஜதந்திர பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முடிவு கிடைக்க வேண்டும் என்று கனடா வெளிவிவகார அமைச்சர் அனித ஆனந்த் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனடா ஆதரவு தெரிவித்திருந்தாலும், போருக்கு முடிவாக பேச்சுவார்த்தை அவசியம் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் புது டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“ஜோர்டான், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அருபு இராச்சியம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும், ஜீ7 நாடுகளுடனும் நான் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கனடா அமைதியான மற்றும் ராஜதந்திர தீர்வை விரும்புகிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
சில நாடுகள் தற்போதைய சூழ்நிலையில் ராஜதந்திர தீர்வு சாத்தியமில்லை எனக் கருதுகின்றன என்றும், மற்ற சில நாடுகள் விரைவில் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் என விரும்புகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.