இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கிலோமீற்றர் தொலைவில் உள்ள கடற்பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, களுத்துறை, பேருவளை, பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சமூக ஊடகப் பயனாளர்கள் தங்களது பகுதிகளிலும் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக பதிவிட்டுள்ளனர்.