Reading Time: < 1 minute

இலங்கை செல்லும் கனேடிய பயணிகளுக்காக கனேடிய அரசாங்கம் பயண ஆலோசனை வழங்கியுள்ளது.

Tamil Business Directory

இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் குற்றச் செயல்கள், குறிப்பாக அறுகம் குடா பகுதியில் இடம்பெறும் அச்சுறுத்தல்கள் காரணமாக பயணிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரசித்திபெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான அம்பாறை அறுகம் குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டலாம் என தகவல்கள் வெளியானது.

அது தொடர்பில் பல்வேறு நாடுகளும் தமது பிரஜைகளுக்கு எச்சரித்த நிலையில், கனேடிய அரசாங்கமும் ம் பயண ஆலோசனை ஒன்றை விடுத்துள்ளது.