Reading Time: < 1 minute

கனடாவில் கொவிட்-19 காரணமாக ஐரோப்பா அல்லது டிஸ்னிலேண்ட்டுக்கு பயணங்களை இரத்து செய்த அனைவருக்கும் ஸ்வூப்பாலும் வெஸ்ட்ஜெட்டாலும் இரத்துசெய்யப்பட்ட விமானப் பயணத் திட்டங்களுக்கான பணத்தைத் திரும்பத் தரத் தொடங்குவதாக வெஸ்ட்ஜெட் அறிவித்துள்ளது.

Tamil Business Directory

நவம்பர் 2ஆம் திகதி தொடங்கி, அசல் கொடுப்பனவு முறை மூலம் அவை மக்களுக்கு பணத்தை திரும்பத் தருவர்கள்.

அடுத்த மாதம் தொடங்கி, தொற்றுநோயின் தொடக்கத்தில் விமானப் பயணங்கள் இரத்து செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் தொடங்கி, பணத்தைத் திரும்பப் பெறக்கூடிய நபர்களுடன் அவை தொடர்புகொள்ளும் என்று அவர்களின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்குமாறு மக்கள் அழைக்க வேண்டாம் என்று அவை கேட்டுக் கொள்கின்றன. ஆனால், இரத்துசெய்யும் காலவரிசைப்படி எல்லோரையும் சென்றடைவதாக அவை உறுதியளிக்கின்றன.

கொவிட்-19ஆல் இரத்து செய்யப்பட்ட பின்னர் மக்களின் பணத்தைத் தானாக முன்வந்து கொடுக்கும் கனடாவின் முதல் பெரிய விமான நிறுவனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.