Reading Time: < 1 minute

கனடா தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) முன்னாள் தலைவரான ஜக்மீத் சிங், கெண்ட்ரிக் லாமார் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

Tamil Business Directory

பிரபல ராப்பர் ட்ரேக் மற்றும் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பின்னர் அவர் இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார்.

“நான் கெண்ட்ரிக்குக்காக இல்லை, SZA-வுக்காக சென்றேன். இந்த நகரத்தில் பிறந்தவன். எனக்குப் பிடிக்கும் என ஜக்மீத் சிங் ஞாயிறு நள்ளிரவில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவுக்கு முன்னதாக, ட்ரேக் தனது இன்ஸ்டாகிராம் மெசேஜில் ஜக்மீத் சிங்கை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார். ஜக்மீத் சிங் எந்த நாளில் நிகழ்ச்சிக்கு சென்றார் என்பது உறுதியில்லை.

ஆனால், கெண்ட்ரிக்–SZA இருவர் இணைந்து Grand National Tour எனும் இசை நிகழ்ச்சியை டொரொன்டோவில் நடத்தினர்.

இது ட்ரேக்குடன் நடந்த பிரபல ராப் மோதலுக்குப் பிறகு கெண்ட்ரிக் செய்த முதல் இசை நிகழ்ச்சியாகும்.

ஜக்மீத் சிங் தனது மன்னிப்பு உரையில், தான் எந்த பக்கம் நின்று பேசுகிறாரென்பதும் தெளிவாகச் சொன்னார்.

எப்போதும் ட்ரேக் தான் கெண்ட்ரிக்குக்கு மேல்! எனவும் தனது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்தார்.