Reading Time: < 1 minute

கனடா- அல்பர்டா பிராந்தியத்தில் கட்டுக்கடங்காமல் எரியும் காட்டுத்தீயை விரைந்து கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்..

Tamil Business Directory

அல்பர்டாவில் இந்த ஒரே மாதத்தில் நூற்றுக்கும் அதிகமான இடங்களில் பற்றி எரியும் காட்டுத்தீயால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதோடு தீயணைப்பு பணியில் அந்நாட்டு ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், எட்மான்டனில் நேரில் ஆய்வு செய்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தீயணைப்பு பணிக்காக கூடுதல் ராணுவத்தினர் களமிறக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.