Reading Time: < 1 minute

அமெரிக்காவுடனான பழைய உறவுகள் முடிவிற்குவந்துவிட்டதாக கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்க ஜனாதிபதி எங்களை சிதைக்கப்பார்க்கின்றார் அதன் மூலம் அமெரிக்கா எங்களை உரிமையாக்கலாம் என அவர் கருதுகின்றார் என தெரிவித்துள்ள மார்க் கார்னி, இது ஒருபோதும் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும்

அதோடு அமெரிக்கா எங்கள் வளங்களை நாட்டை தனதாக்கிக்கொள்ள முயல்கின்றது என நான் பல மாதங்களாக எச்சரித்துவந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா தற்போது வரலாற்றின் மிக முக்கியமான தருணத்தில் உள்ளது, அமெரிக்காவுடான எங்களின் பழைய உறவு முடிவிற்குவந்துவிட்டது என தெரிவித்துள்ள கனடா பிரதமர் , இது பெரும் துன்பியல் நிகழ்வு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் துரோகத்தினால் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு சுதந்திர,இறைமையுள்ள தேசங்களின் எதிர்காலம் குறித்து நான் விரைவில் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவேன், உலகிற்கான தலைமைத்துவத்தின் முன்னணியில் இருப்பதற்கு அமெரிக்கா விரும்பாவிட்டால் கனடா அதனை செய்யும் நாங்கள் வலுசக்தி வல்லரசாக மாறுவோம் எனவும் கனடாவின் புதிய பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.

கனடாவில் நேற்று இடம்பெற்ற பொது தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.