கனடாவின் நீண்டகால அமெரிக்க உறவை மாற்றும் வகையில் சீனாவை மாற்று கூட்டாளியாக பார்க்கக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் பியே பொலியேவ் எச்சரித்துள்ளார்.
கனடாவின் செழிப்பும் பாதுகாப்பும் அமெரிக்காவுடனான நிலையான உறவுடன் இணைந்தவை என அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு ஆண்டுக்கு முன்பு சீனாவை கனடாவுக்கு “மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல்” என கூறியவரே பிரதமர் கார்னி என அவர் நினைவூட்டியுள்ளார்.
கனடாவில் வெளிநாட்டு தலையீடு குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் பின்னர் வெளியான அறிக்கையில், சீனா – மிக நீடித்த மற்றும் சிக்கலான தலையீட்டு அச்சுறுத்தல் எனவும், இந்தியா – இரண்டாவது முக்கிய அச்சுறுத்தல் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது என குறிப்பிடப்பட்டுள்ளதாக பொய்லிவ்ரே சுட்டிக்காட்டியுள்ளார்.
வர்த்தக பன்முகப்படுத்தல் அவசியம். ஆனால் எல்லா கூட்டாளிகளும் ஒன்றுக்கொன்று மாற்றாக இருக்க முடியாது என அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் உள்ள உறவை முறிக்கும் எண்ணம் தவறு என அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கனடாவை 51வது மாநிலமாக மாற்றுவோம் என்ற கருத்தை அவர் கடுமையாக நிராகரித்தார்.
அது நகைச்சுவையாக இருந்தாலும் ஏற்க முடியாத ஒன்று. அது நிகழ வாய்ப்பு பூஜ்யம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.