Reading Time: < 1 minute

வான்கூவரில் Tim Hortons ஊழியரின் முகத்தில் கொதிக்கும் கோப்பியை வீசிவிட்டு மாயமான பெண் தொடர்பில் வான்கூவர் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

Tamil Business Directory

பெண்டர் மற்றும் அபோட் தெருவில் அமைந்துள்ள Tim Hortons-ல் புதன்கிழமை பகல் குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குறித்த கடைக்குள் பகல் 10 மணிக்கு நுழைந்து கோப்பி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இந்த நிலையில், பெண் ஊழியர் ஒருவர் குறித்த பெண்மணிக்கு கோப்பி கிண்ணத்தை கைமாற, திடீரென்று அவர் அந்த கோப்பியை ஊழியரின் முகத்தில் வீசியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து அவர் மாயமானதாக கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக குறித்த ஊழியர் லேசான காயங்களுடன் தப்பியதாகவே தெரிய வந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வான்கூவர் பொலிசார் தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும், வெறுப்பு, பாரபட்சம் உள்ளிட்ட காரணங்களால் அவர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, கண்காணிப்பு கெமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இரண்டு புகைப்படங்களையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு தெரியப்படுத்தவும் கோர்க்கை வைக்கப்பட்டுள்ளது.