டி20 (T20) உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கனடா அணியின் இளம் வீரரான 19 வயதான யுவராஜ் சாம்ரா சதம் அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான குறித்த போட்டியில் வெறும் 58 பந்துகளில் அவர் தனது சதத்தைப் பூர்த்தி செய்தார்.
T20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர்
தனது 19 வயதில் இந்த சாதனையை நிகழ்த்தியதன் மூலம், டி20 உலகக் கிண்ண வரலாற்றில் சதம் அடித்த மிக இளம் வயது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு முன்னதாக, பாகிஸ்தான் வீரர் அஹமட் ஷெஷாத் தனது 22 வயதில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது.
தற்போது 19 வயதிலேயே சதம் அடித்து யுவராஜ் சாம்ரா அதனை முறியடித்துள்ளார். இந்த வரலாற்று சாதனை மூலம் கிரிக்கெட் உலகின் கவனத்தைக் கனடா அணியின் பக்கம் யுவராஜ் சாம்ரா திருப்பியுள்ளார்.




