Ward 25 ஸ்கார்பரோ-ரூஜ் பார்க்கில் புதிய நகர councillor-ஐ தேர்ந்தெடுக்கும் இடைத்தேர்தல் செப்டம்பர் 29 அன்று நடைபெறும் என்று டொரொன்டோ நகராட்சி புதன்கிழமை அறிவித்துள்ளது.
Ward 25 ஸ்கார்பரோ-ரூஜ் பார்க் (Scarborough-Rouge Park) பகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்காக நகர மன்றம் 19-1 என வாக்களித்தது. முன்னாள் மேயர் ஜான் டோரிக்கு நெருங்கிய அணி உறுப்பினராக இருந்த ஜென்னிபர் மெகல்வி (Jennifer McKelvie), சமீபத்திய கனடா பெடரல் தேர்தலில் Ajax riding-ல் லிபரல் கட்சி சார்பில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இந்த இடைத்தேர்தல் தேவைப்பட்டதாக கூறப்படுகிறது. மெகல்வி, தற்போதைய மேயர் ஒலிவியா சவ்வின் தலைமையிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்திருந்தார்.
மேயர் சவ், மெகல்வியின் ஸ்கார்பரோ பகுதியுக்கான துணை மேயராக கவுன்சிலர் பால் ஐன்ஸ்லியை நியமித்துள்ளார். மேலும், அடித்தள வசதிகள் மற்றும் சூழலியல் குழுவின் தலைவர் பொறுப்பை கவுன்சிலர் பவுலா பிளெச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
மக்கள் போட்டியிட விரும்பினால் அல்லது வாக்களிக்கத் தயாராக இருந்தால், அதற்கான முக்கியமான தேதிகள் மற்றும் விவரங்களை நகராட்சி வெளியிட்டுள்ளது:
- வேட்பாளர் நியமனக் கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க ஜூன் 23 காலை 8:30 மணி முதல் தொடங்கலாம்.
- விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 15 பிற்பகல் 2 மணி.
- முன்கூட்டிய வாக்குப்பதிவு நாட்கள்: செப்டம்பர் 20 மற்றும் 21 – காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை.
- இடைத்தேர்தல் நாளான செப்டம்பர் 29 அன்று வாக்குச்சாவடிகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
வரவுள்ள இடைத்தேர்தல் குறித்து மேலும் தகவலை டொரோண்டோ இணையதளத்தில் காணலாம்





