Reading Time: < 1 minute
Tamil Business Directory
நேற்று முன்தினம் Burlington பகுதி QEW பெரும்தெருவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு 20 வயது பெண்கள் கொல்லப்பட்டனர்.
நேற்று காலை 6 மணியளவில் QEW பெருந்தெருவின் கிழக்கு பக்கமாக உள்ள Brant தெருவில் நான்கு வாகனங்கள் விபத்துக்குள்ளானது என OPP அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொல்லப்பட்ட இருவரும் ஒரே வாகனத்தில் மேற்கு திசை நோக்கி பயணித்து கொண்டிருந்ததாகவும் பாதையில் இருந்து விலகி கிழக்கு திசையில் பயணித்துக்கொண்டிருந்த கார் மற்றும் pick up வாகனத்துடன் மோதியதாவும் பொலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்திலேயே இருவரும் கொல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் Owen Sound மற்றும் Cambridge பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் அறியப்படுகிறது.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




