Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஒண்டாரியோ அரசாங்கம் குறைந்த மின் கட்டண முறையை தொடர்ந்து நீடிக்க முடிவு எடுத்துள்ளது. இந்த குறைந்த மின் கட்டண வசதி ஜனவரி 28ம் திகதி அதாவது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் அதனை மீண்டும் நீடிக்க ஒண்டாரியோ மாகாண அரசு முடிவு எடுத்துள்ளது.
இதன் மூலம் ஒரு மணித்தியால மின்சார உபயோக கட்டணமாக 8.5 சதம் மணித்தியாலயத்துக்கு Feb 09ம் திகதி வரை அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட மின்கட்டணம் 24 மணிநேரத்துக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் அனைவரும் வீட்டில் இருக்கும் போது மின்சாரத்தின் பாவனை அதிகமாக உள்ளது தவிர்க்க முடியாது என்றும் அதனால் தான் இந்த விசேட மின்சார கட்டண வசதியை மக்களுக்கு வழங்குவதாக ஒண்டாரியோ மின்சக்தி எரிபொருள் அமைச்சர் Greg Rickford தெரிவித்தார்.




