Reading Time: < 1 minute

அமெரிக்க புலனாய்வுப் பிரிவின் தகவல்களுக்கு அமைய கனடாவில் இளைஞர் ஒருவர் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

மொன்றியலைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவரை பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடக் கூடும் என்ற அச்சத்தினால் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மொஹமட் அமீன் அஸால் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயங்கரவாத குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத காரணத்தினால் குறித்த நபரை பொலிஸார் பின்னர் பிணையில் விடுதலை செய்துள்ளனர்.

பாடசாலை தேவைகளை தவிர்ந்த வேறு தேவைகளுக்கு அலைபேசி, கணனி என்பனவற்றை அவர் பயன்படுத்தக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜீ.பி.எஸ் ட்ரகிங் கருவியொன்றை குறித்த இளைஞர் அணிந்திருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.