Reading Time: < 1 minute

வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோ வீடியோவை பார்க்கும் போது சாக்ஷி அகர்வாலுக்கு பெரிய சம்பவம் ஒன்று காத்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

Tamil Business Directory

Bigg Boss Day27 Promo1 : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் 4 வாரம் முடிய போகிறது. சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் வருவார் அதனால் மக்கள் மத்தியில் இன்று என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவை வைத்து பார்க்கும் போது சாக்ஷி அகர்வாலுக்கு ஒரு பெரிய சம்பவம் காத்துக் கொண்டிருப்பது நன்றாக தெரிகிறது.

ஒவ்வொருவருடம் சாக்ஷி ஒவ்வொரு மாதிரி பேசி வருவதை பற்றி கமல் இன்று பேசுவார் என தெரிகிறது. அதே போல இன்று கவின், சாக்ஷி, லாஸ்லியா ஆகியோர் மத்தியில் பூதாகரமாக எழுந்திருக்கும் சாக்லேட் பிரச்சனை பற்றியும் பேசுவார் என தெரிகிறது.

சாக்ஷியின் பிறந்த நாளான இன்றே அவருக்கு கமல்ஹாசன் அவருக்கு சில குறும்படங்களை காட்டுவார் எனவும் எதிர்பார்க்கலாம்.