Reading Time: < 1 minute

கனடா பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்து அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் தானாகவே முன்வந்து விலகியுள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

பாதுகாப்புப் படை தலைமைப் பதவியில் இருந்த அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்டுக்கு எதிரான குற்றச்சாட்டு விசாரணை ஒன்று முன்னெடுக்கபடும் நிலையிலேயே அந்தப் பதவியில் இருந்து அவர் விலகியுள்ளார்.

இவர் மீதான குற்றச்சாட்டு குறித்து கனேடிய படைகளின் தேசிய புலனாய்வு சேவை விசாரணை செய்து வருவதாக சஜ்ஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு படைகளில் பதில் தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் வெய்ன் ஐர் தன்னால் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சஜ்ஜன் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

எனினும் தலைமைப் பதவியில் இருந்து விலகியுள்ள அட்மிரல் ஆர்ட் மெக்டொனால்ட் மீதான விசாரணைகள் நடைபெற்று வருவதால் இது குறித்து இப்போது மேலதிக தகவல்கள் எதனையும் வெளியிட முடியாது எனவும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.