Reading Time: < 1 minute
Tamil Business Directory
நியூ வெஸ்ட்மின்ஸ்டர் பராமரிப்பு இல்லத்தின் மறுவாழ்வுப் பிரிவில் எட்டு குடியிருப்பாளர்கள் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், தற்காலிகமாக சேர்க்கைக்கு மூடப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரசபை அறிவித்துள்ளது.
இந்த நேரத்தில், நீண்ட காலப் பராமரிப்பு பிரிவு மற்றும் மறுவாழ்வுப் பிரிவில் உள்ள நோய்த்தொற்றுகள் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. மேலும் அலகுகள் தனித்தனியாக இயங்குகின்றன.
இதுகுறித்து நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்பு கண்டுபிடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.




