Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக மூன்று இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக மூன்று இலட்சத்து 53ஆயிரத்து 97பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 30ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மொத்தமாக 11ஆயிரத்து 799பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், ஐந்தாயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டதோடு, 89பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 60ஆயிரத்து 375பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 449பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 80ஆயிரத்து 923பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.