Reading Time: < 1 minute

ஹொங்கொங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்களுக்கு கனடா புகலிடம் அளித்தால் அது சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகும் என கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு எச்சரித்தார்.

Tamil Business Directory

ஹொங்கொங்கில் சீனா விதித்த தேசிய பாதுகாப்பு சட்டம் பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில், இதுகுறித்து கனடாவிற்கான சீன தூதர் காங் பீவு கூறுகையில்,

“தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக போராடும் முன்னணி ஜனநாயக செயற்பாட்டாளர்கள் வன்முறை குற்றவாளிகள்.

எனவே கனடா தரப்பு உண்மையில் ஹொங்கொங்கில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டிருந்தால், ஹொங்கொங்கில் உள்ள 300,000 கனடா கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களின் நல்ல ஆரோக்கியம், பாதுகாப்பு மற்றும் ஹொங்கொங்கில் இயங்கும் கனடா நிறுவனங்களின் எண்ணிக்கையில் அக்கறை இருந்தால், வன்முறைக் குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கான அந்த முயற்சிகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்” என கூறினார்.

கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஃபிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின், காங்கின் கருத்துக்களை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் குழப்பமானது என கூறினார்.