Reading Time: < 1 minute

கனடாவில் செப்டம்பர் மாதம் பிற்பாதிக்கு பிறகு, குறைவான நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு பதிவாகியுள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், 975பேர் பாதிக்கப்பட்டதோடு, 5பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 20ஆம் திகதிக்கு (875பேர்) பிறகு பதிவான நாளொன்றுக்கான குறைந்த பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை ஒரு இலட்சத்து 82ஆயிரத்து 839பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9ஆயிரத்து 627பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 18ஆயிரத்து 954பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 54ஆயிரத்து 258பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 154பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.