Reading Time: < 1 minute
Tamil Business Directory
ஹாமில்டன் வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பாக, பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு டிராகினா நிழற்சாலை தெற்கில் உள்ளவீடொன்றிலிருந்து இரு சடலங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
இது கொலையாக இருக்குமென சந்தேகிக்கும் பொலிஸார், இந்த உயிரிழப்புகளில் தொடர்புடைய இன்னும் சிலரைக் தேடிவருவதாக கூறியுள்ளனர்.
தற்போது பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஹாமில்டன் பொலிஸார், இதுகுறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.




