Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், ஒரு இலட்சத்து 75ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் மொத்தமாக ஒரு இலட்சத்து 75ஆயிரத்து 559பேர் பாதிப்படைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 26ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 9ஆயிரத்து 557பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 436பேர் பாதிக்கப்பட்டதோடு, 16பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 18ஆயிரத்து 494பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 47ஆயிரத்து 508பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் 143பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




