ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளின் போது அமெரிக்காவின் தேசிய கீதத்திற்கு கனடிய ரசிகர்கள் கூச்சலிட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான நட்புறவை கனடா பாழாக்கிக் கொள்ளக் கூடாது எனவும் கனடாவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் வெய்ன் எய்ரி எச்சரித்துள்ளார்.
ஒட்டாவா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புப் பங்களிப்புகளைப் பன்முகப்படுத்துவது குறித்த மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ஜெனரல் வெய்ன் எய்ரி இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடனான உறவு தற்போதைய சூழலில் வெறும் பரிமாற்ற வர்த்தகம் போல மாறினாலும், தற்போதுள்ள கூட்டணிகளை கனடா குருட்டுத்தனமாக நிராகரிக்கக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
யதார்த்த நிலையை உணர்ந்து, நம்மிடம் இன்னும் நட்புறவோடு இருக்கும் நாடுகளுடனான உறவை நாம் பாழாக்கிக் கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தற்போதைய அரசாங்கத்தையும், அந்நாட்டு மக்களையும் நாம் தனித்தனியாகப் பார்க்க வேண்டும். ஹாக்கிப் போட்டிகளில் அவர்களின் தேசிய கீதத்திற்கு கூச்சலிடுவதன் மூலம், நம்மீது நட்பாக இருக்கும் மக்களை நமக்கு எதிராகத் திருப்பிவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.