Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, ஒன்பது ஆயிரத்தைக் கடந்தது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பது ஆயிரத்து 6ஆகும்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24ஆவது நாடாக விளங்கும் கனடாவில், ஒரு இலட்சத்து 20ஆயிரத்து 844பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 423பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டதோடு, 15பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்காயிரத்து 690பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 148பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 292பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.