Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஒரு இலட்சத்து 134பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய கொரோனா வைரஸ் தொற்றினால் 397பேர் பாதிப்படைந்ததோடு, 11பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 14ஆயிரத்து 994ஆக உயர்ந்துள்ளது. மேலும், எட்டு ஆயிரத்து 912பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 5 ஆயிரத்து 948பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, இரண்டு ஆயிரத்து 237பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.