Reading Time: < 1 minute

ஏர் கனடா விமான விபத்தில் உயிரிழந்த விமானிகளின் உடல்கள் கனடா கொண்டுவரப்பட்டுள்ளன.

Tamil Business Directory

மார்ச் மாதம் 22ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, கனடாவின் மொன்றியலிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள LaGuardia விமான நிலையத்தில் சென்று இறங்கிய ஏர் கனடா விமானம் ஒன்று, தீயணைக்கும் ட்ரக் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், விமானத்தை செலுத்திக்கொண்டிருந்த விமானியும் சக விமானியும் உயிரிழந்தார்கள்.

அத்துடன், விமானத்தில் இருந்த 72 பயணிகள் மற்றும் நான்கு பணிப்பெண்களில் 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பலர் பின்னர் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள் என உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

விபத்துக்குள்ளான அந்த விமானத்தை இயக்கிய விமானியான ஆண்டோயின் ஃபாரஸ்ட் (30), கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

ஃபாரஸ்டின் சக விமானியின் பெயர் மெக்கன்ஸி குந்தர் (Mackenzie Gunther, 24). ஒன்ராறியோவில் விமான பயிற்சி பெற்ற குந்தரைக் குறித்து அதிக தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த விமானிகள் இருவரின் உடல்களும் கனடாவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டன.

நேற்று மதியம், அவர்களுடைய உடல்கள் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டிகள் Ottawa சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

தங்கள் பணிக்காலத்தின் ஆரம்ப கட்டத்தில், இளம் வயதில் உயிரிழந்த அவர்கள் இருவருடைய மரணம், அவர்களுடைய சகாக்களிடையே கடும் சோகத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.