கனடாவின் நயாகரா பிராந்தியத்தில் ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நயாகரா காவல்துறை புதன்கிழமை அறிவித்துள்ளது.
2026 பெப்ரவரி மாதம், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பிராந்தியம் முழுவதும் பயணித்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதை அவதானித்த நயாகரா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
மார்ச் 10 அன்று மதியம் 3 மணியளவில், வாகனத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரைத் அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சுமார் $78,000 (கனடிய டாலர்) மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
160 கிராம் ஃபெண்டானில், 280 கிராம் மெத்தாம்பேட்டமைன், 137 கிராம் கொக்கைன், ஆக்ஸிகோடோன் மாத்திரைகள் மற்றும் 8,000 டொலர் ரொக்கப் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தோரோல்டைச் சேர்ந்த பெலாலுதீன் ஷஹாபுதீன் (27), ஜனெல்லே மெக்லியோட் (27), நயாகரா ஃபால்ஸைச் சேர்ந்த கை செஷயர் (25), செயின்ட் கேத்தரின்ஸைச் சேர்ந்த ட்ரெவர் அவேரி (58) மற்றும் டெர்ரி கிரே (54) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஷஹாபுதீன் மற்றும் செஷயர் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள் இன்னும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.