Reading Time: < 1 minute

உலக சந்தையில் மசகு எண்ணெய் (Crude Oil) விலை அதிகரித்து வருவதால், அதன் தாக்கம் கனடிய விவசாயத் துறையிலும், அதனைத் தொடர்ந்து மளிகைப் பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளதாக உணவுப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

குயெல்ஃப் பல்கலைக்கழகத்தின் (University of Guelph) பேராசிரியர் மைக் வான் மாசோ (Mike von Massow) இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது விவசாயிகள் விதைப்புப் பணிகளில் ஈடுபடும் காலம் என்பதால், நிலங்களை உழுவதற்கும் விதைகளை இடுவதற்கும் அதிகப்படியான எரிபொருள் தேவைப்படுகிறது.

உலகளவில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகளுக்கான எரிபொருள் செலவு கணிசமாக உயரும். இது அறுவடை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் நிலவும் போர் காரணமாக, உலகிலேயே மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால்: குறிப்பாக மத்திய கிழக்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நைட்ரஜன் உரங்களின் விலை அதிகரித்துள்ளது. மேற்கு கனடாவை விட, இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் கிழக்கு கனடா (Eastern Canada) இந்த உர விலை உயர்வால் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

உணவுப் பொருட்களின் விலையில் போக்குவரத்துச் செலவு சராசரியாக 3.5% பங்கைக் கொண்டுள்ளது.

ஆனால், இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் இது 10% வரை இருக்கும். தெற்கு அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்காவிலிருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் புதிய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை 10% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

காய்கறிகள் போன்ற அழுகும் பொருட்கள் (Perishable products) வாரந்தோறும் இறக்குமதி செய்யப்படுவதால், அடுத்த 1 முதல் 2 வாரங்களுக்குள் இந்த விலை உயர்வு நுகர்வோரை வந்தடையும் என பேராசிரியர் மாசோ தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.