கனேடிய மாகாணங்களில் ஒன்றான ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனி நாடாகவேண்டும் என சில அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன.
இந்நிலையில், அது குறித்த விவாதங்களே வர்த்தகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திவருவதாக ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து தனி நாடாகவேண்டும் என சில அமைப்புகள் குரல் கொடுத்துவருகின்றன.
என்றாலும், வெளிப்படையாக அது குறித்து பேசுவோர் குறைவுதான். ஆனாலும், ஆல்பர்ட்டா பிரிவது குறித்த பேச்சு கூட வர்த்தகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.
இந்த விவகாரம் தொடர்பில் Calgary Chamber of Commerce என்னும் அமைப்பு சமீபத்தில் ஆய்வொன்றை மேற்கொண்டது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 28 சதவிகிதம் பேர், ஆல்பர்ட்டா பிரிவது குறித்த பேச்சு, தங்கள் வர்த்தகத்தின் மீது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர்களில் 88 சதவிகிதம் பேர், அந்த விடயம் தங்கள் வர்த்தகத்தின் மீது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், ஆய்வில் பங்கேற்றவர்களில் 51 சதவிகிதம் பேர், ஆல்பர்ட்டா பிரிவது குறித்த பேச்சு, மாகாணத்தின் பொருளாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
அவர்களில் 93 சதவிகிதம் பேர், அந்த விடயம் எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கிறார்கள்.
மேலும், எந்த விடயம் உங்கள் வர்த்தகத்தை பாதிக்கிறது என்னும் கேள்விக்கு, 53 சதவிகிதம் பேர், ஆல்பர்ட்டா பிரிவது என பதிலளித்துள்ளார்கள்.
இதற்கிடையில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவிலிருந்து பிரியவேண்டும் என கோரும் அமைப்பினர், மே மாதம் 2ஆம் திகதிக்குள் 177,732 பேர் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக கையெழுத்திடுவதற்காக காத்திருக்கிறார்கள். அப்போதுதான் அது பிரேரணையாக முன்வைக்கப்படமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.