Reading Time: < 1 minute

கடற்கரையில் மக்கள் நெரிசலாக இருப்பது தொடர்பாக விமர்சனம் எழுந்துள்ள போதிலும், ஒன்றாரியோ மாகாண கடற்கரைகளை மூடப்படாது என மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

கனடா தினத்தன்று (ஜூலை 1ஆம் திகதி) வசாகா கடற்கரையில் நெரிசலான கடற்கரைகள் குறித்து டவுன் ஒஃப் வசகா கடற்கரை மேயர் நினா பிஃபோல்ச்சி விமர்சித்தார்.

இதுகுறித்து முதல்வர் டக் ஃபோர்ட்டிடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கேட்கப்பட்டமைக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, மேயர் ஜோன் டோரி, ‘ரொறன்ரோ குடியிருப்பாளர்கள் கொஞ்சம் பொது அறிவைப் பயன்படுத்த வேண்டும், மேலும் இந்த வார இறுதியில் குளிர்விக்க ஒரு கடற்கரைக்குச் செல்ல வேண்டுமானால் குறைந்த நெரிசலான பகுதிகளைத் தேட வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.