Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு, முதல் முறையாக கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Tamil Business Directory

கடந்த 24 மணித்தியாலத்தில் கொடிய வைரஸ் தொற்றினால் 67பேர் பாதிப்படைந்ததோடு, 24பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய கடந்த மார்ச் 14ஆம் திகதிக்கு (54 தொற்றுகள்) பிறகு, முதல் முறையாக வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 4,271பேர் பாதிப்படைந்ததோடு, 8,615பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 27,912பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,744பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,103பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.