Reading Time: < 1 minute

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால் 668பேர் பாதிப்படைந்ததோடு, 44பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய தினங்களாக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு குறைவாகவே பதிவாகிவந்த நிலையில், தற்போது இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 19ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால் மொத்தமாக 1 இலட்சத்து 3,918பேர் பாதிப்படைந்ததோடு, 8,566பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28,174பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 67,178பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 2,089பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.