Reading Time: < 1 minute

கனடாவில் இந்திய வம்சாவளி இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

இது குறித்து பொலிசார் கூறியதாவது; பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு
இதில், வான்கூவரைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான தில்ராஜ் சிங் கில்,28, என்பவருக்கு குண்டு காயம் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தில்ராஜ் சிங்கை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியா கும்பல் மோதல் காரணமாக இந்தக் கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கலாம். துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே, அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்ஸ்டன் தெருவில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

வாகனம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடையதா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகிறது, இவ்வாறு கூறப்பட்டுள்ளது.