Reading Time: < 1 minute
Tamil Business Directory
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வூட்ரிட்ஜ் நீண்டகால பராமரிப்பு இல்லத்தில் இராணுவம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீண்டகால பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கனேடிய ஆயுதப்படைகளின் தொடர்ச்சியான ஆதரவுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மேலும், அடுத்த நாட்களில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து மேலும் பல செய்திகளைப் பகிர்ந்து கொள்வோம்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவமனை ஆதரவைப் பெற்ற போதிலும், வூட்ரிட்ஜ் விஸ்டா கேர் சமூகத்தால் கொவிட்-19இன் பரவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மாகாணம் தெரிவித்தது. இதன் பின்னணியிலேயே இராணுவம் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.




