Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்தை கடந்துள்ளது.

Tamil Business Directory

இதன்படி, இறுதி புள்ளிவிபர அறிக்கைபடி, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85,711ஆக உள்ளது.

அத்துடன், கடந்த 24 மணித்தியாலத்தில், வைரஸ் தொற்றுக்கு 121பேர் உயிரிழந்ததோடு, 1,012பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,545ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 34,528பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 44,638பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.