Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது.

Tamil Business Directory

இதன்படி, ஒட்டுமொத்தமாக வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,031ஆக உள்ளது.

மேலும், கடந்த 24 மணித்தியாலத்தில், 119பேர் உயிரிழந்ததோடு, 1,030பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,142ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 33,335பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 40,776பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 502பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.