Reading Time: < 1 minute
Tamil Business Directory
நான்கு நாட்களாக காணாமல் போன 11 வயது சிறுமியின் நல்வாழ்வு குறித்து வின்னிபெக் பொலிஸார், கவலை தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மாலை வின்னிபெக்கின் யூனிசிட்டி பகுதியில் லைலானி கியூரி என்ற குறித்த சிறுமி கடைசியாக காணப்பட்டார்.
மெலிதான கட்டமைப்பும், அடர்-பழுப்பு நிற தோள்பட்டை நீளமுள்ள கூந்தலும் கொண்ட அவர் ஐந்து அடி நான்கு என்று வர்ணிக்கப்படுகிறார்.
கியூரி கடைசியாக சாம்பல் நிற ஜாக்கெட், சிவப்பு ஹூடி, சாம்பல் பேன்ட், வெள்ளை காலணிகள் மற்றும் நீல நிற பேக் அணிந்திருந்தார்.
இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காணாமல்போனோர் பிரிவை தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.




