Reading Time: < 1 minute
Tamil Business Directory
நோர்த் யோர்க் பகுதியில் எரியுட்டப்பட்ட குப்பை தொட்டியொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பாக, மனிதக் கொலை பிரிவினர், விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என கூறும் விசாரணையாளர்கள், இதுகுறித்து விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்டவரின் விபரங்கள் எதனையும் வெளியிடாத அதிகாரிகள், சந்தேக நபர் குறித்து எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.
கீல் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ அருகே 44 ரோம்ஃபீல்ட் டிரைவில் நேற்று முன் தினம் (செவ்வாய்க்கிழமை) மாலை 3:45 மணியளவில் அவசர குழுவினர் வரவழைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் காணப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் துணை மருத்துவர்கள் தெரிவித்தனர்.




